துரோகம் செய்தவர்கள்
எப்போதும் எதிரிகளாக
இருக்க வேண்டியதில்லை
சில நேரங்களில்
நாம் நண்பர்கள் என்று
நினைத்தவர்களே போதும்
துரோகம் செய்தவர்கள்
எப்போதும் எதிரிகளாக
இருக்க வேண்டியதில்லை
சில நேரங்களில்
நாம் நண்பர்கள் என்று
நினைத்தவர்களே போதும்
மழை ☔
நிலவு 🎑
மெழுகுவர்த்தி 🕯️
எதுவும் தேவையில்லை
நீ அருகில் இருந்தாலே
அந்த நேரம் ரொமான்டிக்காகிடும்
ஒரு காலத்தில்
நம்மை காயப்படுத்திய
விஷயங்களை நினைத்து அழுதோம்
இன்று அதே விஷயங்களை நினைத்து
அதையும் கடந்து வந்துட்டோமே
என்று சிரிக்கிறோம்
நீ அருகில் வந்து நின்றாலே
நான் பேசிக்கொண்டிருந்த
விஷயமே மறந்துபோகுது
ஒரு கட்டத்தில்
எல்லாவற்றையும்
சரி செய்ய வேண்டும்
என்ற ஆசை போய்விடும்
சில விஷயங்கள் சரியாகாமல்
இருப்பதையும் அமைதியாக
ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்வோம்
உன்னை அணைக்கணும்
என்ற ஆசைக்கு
காரணம் தேட வேண்டிய
அவசியமே இல்லை
நமக்கு பிடித்த
வாழ்க்கையை வாழ
எல்லோருடைய அனுமதியும்
தேவையில்லை
சில முடிவுகளை
தனியாக எடுத்தால்தான்
நம்முடைய வாழ்க்கை நமக்கானதாகிறது
உன்னோட இருப்பது
எனக்கு சந்தோஷம் மட்டும் இல்லை
நான் என்னவாக இருக்கிறேனோ
அப்படியே இருக்க முடிகிற நிம்மதி
வயது கூடும்போது
நண்பர்கள் குறைவது
வருத்தமில்லை
யார் நண்பர் என்பதே
தெளிவாகத் தெரிகிறது
சில காதல்கள்
சத்தமாக சொல்லப்படாது
ஒருவருக்காக இன்னொருவர்
காத்திருக்கும் நேரத்திலேயே தெரிந்துவிடும்